விமானத்தின் இயந்திரத்தில் சிக்கி பரிதாபமாக பலியான நபர்
அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் விமானத்தின் இயந்திரத்திற்குள் இழுக்கட்டு, பரிதாபமாக பலியாகியுள்ளார் ஊழியர் ஒருவர்.
சனிக்கிழமை குறித்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளதாக அதிகாரிகள் தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது. அலபாமா மாகாணத்தின் மாண்ட்கோமெரி பிராந்திய விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தின் இயந்திரம் திடீரென்று செயல்படத் தொடங்கியுள்ளது.
சம்பவயிடத்தில் பணியில் இருந்த ஊழியர் ஒருவர் இதில் சிக்கிக்கொண்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பில் முழுமையான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், 2ல் இருந்து மூன்று வாரத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் நிர்வாகிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.
டிசம்பர் மாதம் 7ம் திகதி காம்பியாவில் இருந்து லண்டன் கேட்விக் விமான நிலையத்தில் தரையிறங்கிய TUI விமானத்தில் இருந்து ஆணின் சடலம் ஒன்றை அதிகாரிகள் கைப்பற்றிருந்தனர்.
அடையாளம் தெரியாத அந்த கருப்பின நபர் விமானத்தின் சக்கரம் பொருத்தப்பட்டிருக்கும் பகுதியில் காணப்பட்டார் என்பது குரிப்பிடத்தக்கது.