பால்வினை நோய்களினால் பாதிக்கப்படும் கனேடிய சிசுக்கள்?
கனடாவின் அல்பர்ட்டா மாகாணத்தில் பிறக்கும் சிசுக்களுக்கு பால்வினை நோய்த் தாக்கம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2018ம் ஆண்டில் ஒரு லட்சம் பேரில் 30.8 சிசுக்களுக்கு காணப்பட்ட இந்த பால்வினை நோய்த் தொற்று தற்பொழுது ஒரு லட்சம்பேரில் 169.1 பேருக்கு ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரதானமான பால்வினை நோய்களில் ஒன்றான சிபிலீசு நோயினால் அல்பர்ட்டா சிசுக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பிறக்கும் போதே சிசுக்களுக்கு பால்வினை நோய்த் தொற்று பரவியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சிபிலிசு நோய்த் தொற்று கருவில் இருக்கும் சிசுக்களுக்கு பெரும் ஆரோக்கிய கேடுகளை விளைவிக்கும் என மருத்துவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளனர்.
கர்ப்பகாலத்தின் முதல் பாதி பகுதியில் நோய்த் தொற்று அடையாளம் காணப்பட்டு சிகிச்சை அளித்தால் சிசுக்களை ஆபத்திலிருந்து மீட்க முடியும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு நோய்த் தொற்று அதிகளவில் பரவுவதற்கான காரணங்கள் எதுவும் இதுவரையில் கண்டறியப்படவில்லை.
எனினும், பால்வினை நோய்கள் பற்றிய தெளிவின்மை, டேடிங் செயலிகள், ஆரம்பத்திலேயே பரிசோதனை செய்யாமை உள்ளிட்ட ஏதுக்களினால் இந்த நோய் சிசுக்களுக்கு கடத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.