அல்பர்ட்டா தனிமைப்படுத்தல் சட்டங்களில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்!
கனடா மாகாணமான அல்பர்ட்டாவில் தனிமைப்படுத்தல் சட்டங்களில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அல்பர்ட்டா மாகாணத்தில் தனிமைப்படுத்தலுக்கான மொத்த நாட்களின் எண்ணிக்கை 10லிருந்து 5 தாக குறைக்கப்பட்டுள்ளது.
அல்பர்ட்டா மாகாணத்தின் சுகாதார அமைச்சர் ஜேசன் கோபிங் (Jason Copping) மற்றும் மாகாண பிரதம சுகாதார அதிகாரி டொக்டர் டீனா ஹின்ஸாவ் ஆகியோர் இந்த விடயத்தை அறிவித்துள்ளனர்.
இதேவேளை, தனிமைப்படுத்தலில் இருப்பவர்கள் வீட்டை விட்டு வெளியே வரும் போது முகக் கவசம் அணிய வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மேலும், ஐந்து நாட்களின் பின்னரும் நோய் அறிகுறிகள் தென்பட்டால் ஐந்து நாட்களின் பின்னரும் தனிமைப்படுத்தலில் இருக்க நேரிடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.