அரசாங்கத்துடன் முரண்படும் அல்பர்ட்டா மாகாணம்?
சமஷ்டி அரசாங்கத்துடன் அல்பர்ட்டா மாகாணம் முரண்பட்டுக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
துப்பாக்கி சட்டம் தொடர்பில் மாகாண அரசாங்கத்திற்கும் மத்திய அரசாங்கத்திற்கும் இடையில் முரண்பாட்டு நிலை உருவாகியுள்ளது.
துப்பாக்கிப் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய அரசாங்கம் பில்-சீ21 சட்டத்தினை அறிமுகம் செய்துள்ளது.
எனினும் இந்த சட்டத்திற்கு சவால் விடுக்கும் வகையில் அல்பட்டா மாகாண அரசாங்கம் பில்8 என்னும் சட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
துப்பாக்கி உரிமையாளர்களை பாதுகாக்கும் நோக்கில் இந்த சட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
சட்டத்தை மதிக்கும் துப்பாக்கி உரிமையாளர்கள் மீது ஒட்டாவா கடுமையான அழுத்தங்களை பிரயோகிப்பதாக மாகாண அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஆயுதங்களை சுவீகரிப்பது குறித்த சட்டத்திற்கு சவால் விடுக்கும் புதிய சட்ட ஏற்பாடுகள் மாகாண மட்டத்தில் உருவாக்கப்பட்டுள்ளது என அல்பர்ட்டா நிதியமைச்சர் டைய்லர் சான்ட்ரோ (Tyler Shandro) தெரிவித்துள்ளார்.