அல்பர்ட்டா மக்களுக்கு அரசாங்கம் வழங்கும் கொடுப்பனவு
அல்பர்ட்டா பிரஜைகளுக்கு மாகாண அரசாங்கம் கொடுப்பனவு தொகை ஒன்றை வழங்க உள்ளது.
பணவீக்கம் காரணமாக மக்களுக்கு எதிர்நோக்க நேரிடும் அசௌகரியங்களுக்கு உதவும் நோக்கில் இந்த கொடுப்பனவு வழங்கப்படுகின்றது.
கொடுப்பனவு பெறும் தகுதி பெற்றுக் கொண்டவர்கள் இன்று முதல் உதவி தொகைக்காக விண்ணப்பம் செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தமாக 600 டொலர்கள் கொடுப்பனவு வழங்கப்பட உள்ளதாகவும் மாதாந்தம் 100 டொலர்கள் தெரிவு செய்யப்பட்டவர்களின் வங்கி கணக்குகளில் வைப்பிலிடப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
180000 டொலர் வருட வருமானம் பெற்றுக் கொள்ளும் குடும்பங்களுக்கு இவ்வாறு கொடுப்பனவு தொகை வழங்கப்பட உள்ளது.
இவ்வாறு கொடுப்பனவு தொகை வழங்குவதன் மூலம் பொருளாதார ரீதியில் நலிந்த மக்களுக்கு நலன் ஏற்படும் என சமூக சேவைகள் அமைச்சர் ஜெர்மி நிக்சன் தெரிவித்துள்ளார்.