கனடாவின் சுகாதார முறைமை குறித்து அல்பெர்ட்டா மக்கள் அதிருப்தி
கனடாவின் சுகாதார சேவைகள் தொடர்பில் அல்பெர்ட்டா மக்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
அல்பெர்டா மக்களின் பெரும்பாலானோர், சுகாதார சேவைகளில் தனியார் வழங்குநர்களின் பங்களிப்பினை விரும்புகிறார்கள் என புதிய கருத்துக்கணிப்பு ஒன்று வெளிவந்துள்ளது.
மொன்ட்ரியல் எகனாமிக் இன்ஸ்டிடியூட் (MEI) சார்பில், Ipsos நிறுவனம் நடத்திய இக்கணிப்பில், கனடாவைச் சேர்ந்த 56% மக்கள் தனியார் மருத்துவ சேவைகளுக்கான அணுகலை அதிகரிக்க முழு ஆதரவு வெளியிட்டுள்ளனர்.
இதில் கியூபெக் மாகாணத்தைச் சேர்ந்த 68 வீத மக்களும், அல்பெர்டா மாகாணத்தைச் சேர்ந்த 62% மக்களும் தனியார் மருத்துவ சேவைகளுக்கு கூடுதல் அணுகல் தேவை என தெரிவித்துள்ளனர்.
கனடா முழுவதும் உள்ள மக்கள், சுகாதார அமைப்பில் தனியார் வழங்குநர்களின் பங்கேற்பை விரும்புகிறார்கள் என்பதை இந்த கருத்துக்கணிப்பு தெளிவாக காட்டுகிறது என MEI நிறுவனத்தின் பொருளாதார நிபுணர் எமனுவேல் பி. ஃபோபேர் தெரிவித்துள்ளார்.
அல்பெர்டா, ப்ரிட்டிஷ் கொலம்பியா மற்றும் கியூபெக் மாகாணங்களின் மக்களில் பெரும்பாலானோர் தற்போதைய அரசு மருத்துவ முறைமை குறித்து அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.