அல்பர்ட்டாவில் குறைந்த ஊதியம் தொடர்பில் முதல்வரின் கருத்து
கனடாவில் அல்பர்ட்டா மாகாணத்தில் குறைந்த ஊதியம் வழங்கப்படுவது குறித்து மாகாண முதல் டேனியெல் ஸ்மித் வெளியிட்டுள்ளார்.
கனடாவில் மிகக் குறைந்த ஊதியத்தைக் கொண்ட மாகாணமாக மீண்டும் அல்பர்ட்டா பதிவாகியுள்ள நிலையில் முதல்வர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
ஏனைய மாகாணங்களை விடவும் அல்பர்ட்டாவில பல்வேறு நலன் திட்டங்கள் அமுல்படுத்தப்படுவதானல் காணடாவின் மிகக் குறைந்த ஊதியம் கொண்ட மாகாணமாக திகழ்வது குறித்து வருத்தப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இன்று முதல் மணிடோபா, சஸ்காச்சுவான், நோவா ஸ்கோஷியா மற்றும் பிரின்ஸ் எட்வர்ட் தீவில் குறைந்தபட்ச ஊதிய உயர்வுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இதனால், அல்பெர்டாவின் தற்போதைய மணித்தியாலத்திற்கு 15 டொலர் என்ற ஊதியம் கனடாவில் மிகக் குறைந்ததாக மாறியுள்ளது.
அல்பெர்டாவில் மாகாண விற்பனை வரி இல்லாதது போன்ற பல நன்மைகள் உள்ளதாக முதல்வர் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
குறைந்தபட்ச ஊதிய உயர்வு இளைஞர்களின் அதிக வேலைஇல்லாமையை சமாளிக்காது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.