அமெரிக்க வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளரை வர்ணித்துப் பேசிய டிரம்ப்
அமெரிக்க வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட்டை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வர்ணித்துப் பேசியது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆட்சியில் பொருளாதார வெற்றி குறித்து பேசினார்.

நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், இன்று நாங்கள் எங்கள் சூப்பர் ஸ்டார் கரோலினையும் உடன் அழைத்து வந்துள்ளோம். அவர் பெரியவர் அல்ல; இருந்தாலும் அவர் சிறந்தவர்.
அவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்குச் செல்லும்போது, முழுவதுமாக அவரே ஆதிக்கம் செய்கிறார். அந்த அழகான முகத்துடனும், ஓர் இயந்திரத் துப்பாக்கியைப் போல நிறுத்தப்படாத உதடுகளுடனும் வருகிறார்.
எங்களிடம் சரியான கொள்கை இருப்பதாலேயே அவருக்கு அச்சம் என்பதேயில்லை’’ என்று தெரிவித்தார்.
கடந்த ஒக்டோபர் மாதத்தில், எகிப்து நாட்டில் நடைபெற்ற காஸா அமைதி மாநாட்டில் பங்கேற்ற இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியையும் ட்ரம்ப் வர்ணித்துப் பேசியிருந்தார்.
இந்த நிலையில்தான், கரோலினை ட்ரம்ப் வர்ணித்துப் பேசியிருப்பது சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வருகிறது.