புடினால் பொறுமையிழந்த பாகிஸ்தான் பிரதமர்; பின்னர் நடந்த சம்பவம்
துர்க்மெனிஸ்தானில் ரஷ்ய அதிபர் புதினை சந்திக்க பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் 40 நிமிடங்கள் வரை காத்திருந்த சம்பவம் பேசுபொருளாகியுள்ளது.
உலக அரசியல் தலைவர்களில் ரஷ்ய அதிபர் புதின் முக்கியமானவர். பலத்த பாதுகாப்பு அம்சங்களை கொண்டவர்.

புதினுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் பாதுகாப்பு
உலக அரசியல் தலைவர்களில் புதினுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் பாதுகாப்பு அம்சம் போல் வேற எந்த நாட்டு அதிபர் மற்றும் ஜனாதிபதிக்கும் கொடுப்பதில்லை என்றே சொல்லலாம்.
அந்த அளவுக்கு அவரை சுற்றி பல பாதுகாப்பு அம்சங்கள் செயல்பட்டு வருகின்றன. சமீபத்தில் கூட இந்தியா வந்து இரண்டு நாட்கள் தங்கி இருந்தார் புதின். அப்போதும் அவரை சுற்றி அவ்வளவு பாதுகாப்பு அம்சங்கள் உருவாக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில்தான், துர்க்மெனிஸ்தானில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதின் கலந்து கொண்டார். எனவே, அவரிடம் பேச பல அரசியல் தலைவர்களும் ஆர்வம் காட்டினார்கள்.
அப்போது அவரை சந்திக்க பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் 40 நிமிடங்கள் வரை காத்திருந்தார். ஆனால், அவருக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை. ஏனெனில், அப்போது புதின் துருக்கி அதிபருடன் பேசிக் கொண்டிருந்தார்.
40 நிமிடங்களுக்கு மேல் பொறுமை இழந்த ஷெபாஷ் ஷெரில் நேராக புதினின் அறைக்குள் நுழைந்ததால அங்கு பரபரப்பு ஏற்பட்டது. எனினிம் 10 நிமிடங்களில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் அங்கிருந்து வெளியேறி சென்று விட்டதாகவும் கூறப்படுகின்றது..