ஒன்டாரியோவில் மேற்கொள்ளப்பட உள்ள சோதனை
ஒன்டாரியோ மாகாதண்தில் கனடாவின் Alert Ready எனப்படும் தேசிய அவசர எச்சரிக்கை அமைப்பின் வருடாந்த சோதனை முன்னெடுக்கப்பட உள்ளது.
ஸ்மார்ட்போன்கள் இன்று மதியம் 12.55 மணிக்கு முழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சோதனைக்காக, இணக்கமான அனைத்து மொபைல் சாதனங்களிலும் ஒரு சிறப்பு அலாரம் ஒலி ஒலிக்கும், மேலும் திரையில் அது ஒரு சோதனைச் செய்தி என்பதை குறிப்பிடும் தகவலும் தோன்றும் என தெரிவிக்கப்படுகின்றது.

தொலைக்காட்சிகள், வானொலிகள் மற்றும் இணையத்துடன் இணைக்கப்பட்ட மற்ற வயர்லெஸ் சாதனங்களிலும் இந்த சோதனை ஒலி ஒளிபரப்புச் செய்யப்பட உள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட அரசாங்க அமைப்புகள் மட்டுமே இந்த எச்சரிக்கைகளை வெளியிட முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
பொதுவாக மனிதர்களின் உயிருக்கு அபாயம் ஏற்பட்டால் மட்டுமே இந்த எச்சரிக்கைகள் அனுப்பப்படுகின்றன.
Alert Ready இணையதளத்தின் தகவலின்படி, இந்த ஆண்டில் ஒன்டாரியோவில் மொத்தம் 230 அவசர எச்சரிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.
சூறாவளி, இடிமழை, குழந்தை காணாமல் போதல் சம்பவங்கள், தீவிரவாத எச்சரிக்கைகள் உள்ளிட்டன இவ்வாறு வெளியிடப்படுகின்றன.