இந்தியாவில் இடைநிறுத்தப்பட்ட 32விமான சேவைகளும் மீண்டும் ஆரம்பம் !
இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் காரணமாக மே 15ஆம் திகதி வரை தற்காலிகமாக நிறுத்தப்பட்ட வடமேற்கு பகுதியிலுள்ள 32விமான சேவைகளும் போர் பதற்றம் முடிவுக்கு வந்துள்ள நிலையில் மீண்டும் ஆரம்பிக்க முடிவு செய்துள்ளதாக இந்தியாவின் மத்திய அரசு அறிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த 22ஆம் திகதி காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை அடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் ஒபரேசன் சிந்தூர் என்ற பெயரில் தாக்கி அழித்திருந்தது.
இதனை தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்தது.
இந்நிலையில், அமெரிக்க ஜளாதிபதி டொனால்ட் டிரம்ப் தலையீட்டால் இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடியான போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் அளிதிருந்தமை குறிப்பிடத்தக்கது.