Big Beautiful Bill ; புதிய வரி சட்டத்தில் கையொப்பமிட்டார் ட்ரம்ப்
“Big Beautiful Bill" என பெயரிடப்பட்டுள்ள புதிய வரி சட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையொப்பமிட்டுள்ளார்.
“Big Beautiful Bill" என பெயரிடப்பட்டுள்ள புதிய வரி செலவு மற்றும் வரி தொடர்பான ஒரு வரிச் சட்டமாகும். இந்த புதிய வரிச் சட்டம் அமெரிக்காவின் வளர்ச்சிக்கு உதவும் என்று கூறப்படுவதுடன் இதற்கு எதிராக விமர்சனங்களும் எழுந்து உள்ளன.
பல முக்கியமான விஷயங்கள்
இந்த வரிச் சட்டத்தில் டிரம்ப் தனது இரண்டாவது ஆட்சிக்காலத்தில் செய்ய நினைத்த பல முக்கியமான விஷயங்கள் உள்ளன.
“Big Beautiful Bill" என்ற புதிய வரி சட்ட மூலம் ஜூலை 4 ஆம் அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் 218 - 214 என்ற வாக்கு வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
டிரம்ப் கையெழுத்திட்டுள நிறைவேற்றப்பட்டுள்ள “Big Beautiful Bill" என்ற புதிய வரிச் சட்டம் அமெரிக்காவில் பெரிய மாற்றங்களை கொண்டு வர உள்ளது. இது அமெரிக்காவின் பொருளாதாரம் மற்றும் சமூகத்தில் பல தாக்கங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து டிரம்ப் தனது சமூக வலைத்தளமான ட்ரூத் இல்,
"நான் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து நமது நாடு ஏற்கனவே வளர்ந்ததை விட, இன்னும் அதிக வளர்ச்சியைக் காணப்போகிறது என டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.