இஸ்ரேல் பிணைக் கைதிகள் அனைவரும் விடுவிப்பு!
காஸா அமைதி ஒப்பந்தப்படி இஸ்ரேல் பிணைக் கைதிகள் 20 பேரை ஹமாஸ் அமைப்பு விடுவித்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்ட 20 இஸ்ரேல் பிணைக் கைதிகளும் இஸ்ரேல் அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, ஹமாஸ் அமைப்பினரால் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்ட அனைத்து இஸ்ரேல் பிணைக் கைதிகளும் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இஸ்ரேல் முழுவதும் பெரிய திரைகளில் பார்த்த மக்கள் மகிழ்ச்சி
இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான இரண்டு ஆண்டு போர் முடிவுக்கு வந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மத்தியஸ்தம் செய்த போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ஹமாஸ் பிடியில் இருந்த அனைத்து இஸ்ரேலிய பிணைக்கைதிகளும் செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.
மொத்தம் இரண்டு கட்டங்களாக பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். இரண்டாம் கட்டத்தில் 13 பிணைக்கைதிகள் தெற்கு காசாவின் கான் யூனிஸில் வைத்து மாற்றப்பட்டனர்.
விடுவிக்கப்பட்ட பிணைக்கைதிகள் இஸ்ரேலிய பாதுகாப்புப் படை மையத்தில் மருத்துவ பரிசோதனைக்கு பின் தங்கள் குடும்பத்தினரை சந்திக்க உள்ளனர்.
இந்த விடுதலை செய்தியைக் கேட்டு, இஸ்ரேல் முழுவதும் பெரிய திரைகளில் பார்த்த மக்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர்.