மீண்டும் ஆள்குறைப்புச் செய்யும் Alphabet; கவலையில் ஊழியர்கள்
கூகுளை நிர்வகிக்கும் Alphabet நிறுவனம், மீண்டும் ஆள்குறைப்புச் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்காரணமாக Alphabet ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனினும் முக்கிய வேலைகளுக்குத் தேவையான ஊழியர்களைத் தெரிவு செய்து பணியில் சேர்க்கப் போதுமான ஊழியர்கள் இருப்பர் என்று Alphabet கூறியுள்ளது.
அதேவேளை Alphabet நிறுவனம் கடந்த ஜனவரி மாதத்தில் 12,000 பேரை ஆள்குறைப்புச் செய்தது. இதனூடாக ஊழியர்களின் எண்ணிக்கை 6 விழுக்காடு குறைக்கப்பட்டது.
இது இவ்வாறு இருக்க இவ்வாண்டு முற்பாதியில் Meta, Microsoft, Amazon ஆகிய தொழில்நுட்ப நிறுவனங்களும் ஊழியர்களைக் கணிசமாகக் குறைத்த நிலையில் மீண்டும் Alphabet நிறுவனம் மீண்டும் ஆள் குறைப்பு செய்யவுள்ளமை ஊழியகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.