அமெரிக்காவில் 94 இலட்சம் சிறுவர்களுக்கு ஏற்பட்டுள்ள கொடிய பாதிப்பு!
கொரோனா பரவல் ஆரம்பித்ததில் இருந்து அமெரிக்காவில் 94 இலட்சம் சிறுவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்கன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ் மற்றும் குழந்தைகள் வைத்திய சங்கத்தின் சமீபத்திய அறிக்கை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, ஜனவரி 13-01-2022 ஆம் திகதி வரை நாடு முழுவதும் மொத்தம் 9,452,491 சிறுவர்களுக்கு கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. அத்துடன் பாதிக்கப்பட்ட குழந்தைகள் 17.8 சதவீதத்தை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளனர்.
அமெரிக்காவின் மொத்த சனத்தொகையில் 100,000 சிறுவர்களில் 12,559 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 13 ஆம் திகதியுடன் முடிவடைந்த கடந்த வாரத்தில் கிட்டத்தட்ட 10 இலட்சம் சிறுவர்களுக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளன.
இது கடந்த குளிர்காலத்தின் அதிகரிப்பை விட நான்கு மடங்கு அதிகமாகும் என்று தெரிவித்துள்ளது. வாராந்திர தொற்றாளர்களனின் எண்ணிக்கை முந்தைய வாரத்தில் பதிவாகிய 580,000 தொற்றுக்களை விட 69 சதவீதம் அதிகரித்துள்ளது.
மேலும் இரண்டு வாரங்களுக்கு முந்தைய தொற்றாளர்களின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் 100,000க்கும் அதிகமான சிறுவர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாவது தொடர்ச்சியாக 23 ஆவது வாரமாக அதிகரித்து வருகின்றது. செப்டம்பர் முதல் வாரத்தில் இருந்து, 44 இலட்சத்திற்கும் அதிகமான சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.