வீட்டு குவளையிலிருந்த லொத்தரி சீட்டுக்கு விழுந்த மிகப்பெரும் பரிசு: இத்தனை கோடியா!
அமெரிக்கா - மாசசூசெட்ஸ் பகுதியை சேர்ந்த கலீல் சவுசா. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு லாட்டரி சீட்டு வாங்கினார்.
சமீபத்தில் தான் அந்த லாட்டரி டிக்கெட்டுக்கு பரிசு அறிவிப்பு நடந்துள்ளது.
அப்போது அந்த கலீல் சவுசா வீட்டில் லாட்டரி டிக்கெட்டை வீட்டை துப்பரவு செய்யும் பணியாளர் மூலம் பெற்றுக்கொண்டார்.
கிடைக்கப் பெற்ற பரிசுத்தொகை
அவரிடம் இருந்த டிக்கெட்டுக்கு ஒரு மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.8.34 கோடி) பரிசு கிடைத்துள்ளது.
இதில் வரிகள் போக அவருக்கு ரூ.5.50 கோடி கிடைக்கும்.
இதனால் சந்தோஷத்தில் கலீல் சவுசா லாட்டரியில் கிடைத்த பரிசு தொகையில் ஒரு பகுதியை தேவைப்படும்
நண்பர்களுக்கு உதவ விரும்புவதாகவும், தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடைகள் வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.