அமெரிக்காவில் பரபரப்பு: உலகின் மிகப்பெரிய நூலகம் அருகே வெடிமருந்துடன் பிடிபட்ட லொறி
உலகின் மிகப்பெரிய நூலகமான அமெரிக்க நாடாளுமன்ற நூலகத்தின் அருகே வெடிமருந்து ஏற்றிவந்த லொறி ஒன்று பிடிபட்டுள்ளதாக அமெரிக்க பொலிஸார் தெரிவித்திருக்கின்றனர்.
சற்றுமுன் நடந்த இந்த நிகழ்வில், லாரியை ஓட்டிவந்த ஒருவர் அந்த லொறியை சாலையோரத்தில் பிளாட்பாரம் மீது ஏற்றி நின்றதாகவும், கையில் ஏதோ மர்மமான பொருளை வைத்திருந்ததாகவும் முதல் கட்ட தகவலில் தெரிவித்துள்ளனர்.
இது ரிமோட் மூலம் இயங்கக் கூடிய வெடிபொருளா அல்லது வேறு வகையில் இயங்கக்கூடியதா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த பகுதி முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவந்துள்ள பொலிஸார், செய்தியாளர்கள் உள்ளிட்ட யாரையும் வெடிபொருட்கள் இருக்கும் இந்த இடத்தை நோக்கி வரவேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.