மூளையை உண்ணும் அமீபாவால் உயிரிழந்த அமெரிக்கர்!
அமெரிக்கர் ஒருவர் மூளையை உண்ணும் அமீபாவால் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த செய்தியை சார்லோட் கவுண்டியில் உள்ள புளோரிடா சுகாதாரத்துறை கடந்த மாதம் 23ஆம் திகதி அன்று வெளியிட்டிருந்தது.
எனினும், பாதிக்கப்பட்டவர் தொடர்பான விபரங்களை வெளியிடவில்லை.
உலகளவில் மண் மற்றும் நன்னீரில் காணப்படும் ஒரு செல் உயிரினமான நெக்லேரியா ஃபோலேரி எனும் அமீபா மூக்கு வழியாக மூளைக்கு சென்றிருக்கலாம் என கருதப்படுகிறது.
இதனையடுத்து அது மூளையில் பாதிப்புக்களை ஏற்படுத்தி இருக்கலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான பாதிப்பு ஏற்பட்டிருந்தால் தலைவலி, காய்ச்சல், குமட்டல், சமநிலை இழப்பு, திசை திருப்பல், வலி போன்றவை ஏற்படும் எனவும் மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.