பாக்தாத்தில் கடத்தப்பட்ட அமெரிக்கா பெண் ஊடகவியலாளர்

United States of America Iraq Kidnapping Women
By Sulokshi Apr 01, 2026 06:47 AM GMT
Report

  அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஊடகவியலாளர் ஷெல்லி கிட்டில்சன் (Journalist Shelly Kittleson), ஈராக் தலைநகர் பாக்தாத்தில் கடத்தப்பட்டுள்ளதாக ஈராக் மற்றும் அமெரிக்க அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

கடத்தல் சம்பவத்தில் ஈரானின் ஆதரவு பெற்ற ஆயுதக் குழுவான 'கதாயிப் ஹிஸ்புல்லா தொடர்புபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. பாக்தாத் நகரின் மையப்பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்கு அருகாமையில் செவ்வாய்க்கிழமை மாலை கடத்தல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பாக்தாத்தில் கடத்தப்பட்ட அமெரிக்கா பெண் ஊடகவியலாளர் | American Female Journalist Kidnapped In Baghdad

 கடத்தல்காரர்களின் வாகனம் கவிழ்ந்து விபத்து

கடத்தல்காரர்களை ஈராக் பாதுகாப்புப் படைகள் பின்தொடர்ந்து விரட்டியபோது, கடத்தல்காரர்களின் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஒரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் ஈரானின் ஆதரவு பெற்ற கதாயிப் ஹிஸ்புல்லா அமைப்பைச் சேர்ந்தவர் என அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா பெண் ஊடகவியலாளர் ஷெல்லி கிட்டில்சன் (Journalist Shelly Kittleson) நீண்டகாலமாக ஆப்கானிஸ்தான், ஈராக் மற்றும் சிரியா போன்ற போர் வலயங்களில் பணியாற்றி வரும் ஒரு அனுபவமிக்க ஊடகவியலாளர் ஆவார்.

கதாயிப் ஹிஸ்புல்லா அமைப்பின் கடத்தல் பட்டியலில் இவரது பெயர் இருந்ததாக அமெரிக்க அதிகாரிகள் இவருக்கு ஏற்கனவே பலமுறை எச்சரிக்கை விடுத்திருந்தனர். கடத்தப்படுவதற்கு முதல் நாள் (திங்கட்கிழமை இரவு) கூட இவருக்கு அச்சுறுத்தல் குறித்து எச்சரிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவரை மீட்பதற்காக எப்.பி.ஐ , அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் மற்றும் ஈராக் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவினர் இணைந்து செயற்பட்டு வருகின்றனர். இவரைப் பாதுகாப்பாக மீட்பதற்கு உயர்மட்ட அளவில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக ஈராக் உள்நாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.

ஷெல்லி கிட்டில்சன் (Journalist Shelly Kittleson) பணியாற்றும் 'அல்-மானிட்டர்' செய்தி நிறுவனம், அவரது பாதுகாப்பு தொடர்பில் மிகுந்த கவலை வெளியிட்டுள்ளதுடன், அவரை உடனடியாக விடுவிக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளது. 

மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US