பயிற்சியில் சொதப்பிய அமெரிக்கச் சிறப்புப் படையினர்!
அமெரிக்கச் சிறப்புப் படையினர் தவறான ஹோட்டல் அறையினுள் புகுந்து தூங்கிக்கொண்டிருந்த நபரைக் கைதுசெய்துள்ளனர்.
FBI எனப்படும் அமெரிக்க மத்தியப் புலனாய்வுப் பிரிவுடன் சேர்ந்து பாஸ்டன் நகரில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.
இதன்போது அமெரிக்கச் சிறப்புப் படையினர் , தவறான தகவலின்படி அவர்கள் Delta ஏர்லைன்ஸ் விமானியைக் கைதுசெய்ய நேரிட்டது.
அந்த விமானி குளியலறையில் ஒரு மணிநேரம் விசாரிக்கப்பட்ட பின்புதான் தவறான நபரைக் கைதுசெய்திருப்பதை சிறப்புப் படையினர் உணர்ந்தனர்.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட நபரிடம் லெஃப்டினென்ட் கர்னல் மைக் பர்ன்ஸ் (Lt. Col. Mike Burns) மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.
மேலும் பரிச்சயமற்ற சூழல்களில் ராணுவ வீரர்களின் திறனை மேம்படுத்துவதே அந்தப் பயிற்சியின் நோக்கம் என்று அவர் கூறினார்.