பிரான்ஸ் மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!
பிரான்ஸில் உள்ள வீதிகளில் முன்னெடுக்கப்படும் பணிகள், திருடர்களின் முதல் ஆபத்தான தேனீக்கள் வரை அனைத்து ஆபத்துக்கள் தொடர்பில் குடியிருப்பாளர்களை எச்சரிக்கும் செயலி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
உள்ளூர் அதிகாரிகளின் பங்களிப்புடன் கைடக்க தொலைபேசி செயலி ஒன்று தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 8,800 க்கும் மேற்பட்ட உள்ளூர் அதிகாரிகள் இந்த செயலியை செயல்படுத்தியுள்ளனர்.
பெரும்பாலும் நகரங்கள் மற்றும் உள்ளூர் கிராமங்களில் பொலிஸ் படைகள், கார் விபத்துக்கள் அல்லது அப்பகுதியில் ஏராளமான திருட்டுகள் தொடர்பில் பொது மக்களுக்கு எச்சரிக்கைகளை அனுப்புவதற்கு இதைப் பயன்படுத்துகின்றன.
குறித்த செயலியை பதிவிறக்கம் இலவசமாக மேற்கொள்ள முடியம். மேலும் இதில் இணைப்பு அனைத்து மாவட்டங்கள் மற்றும் பிரதேசங்களிலும் அதனை அணுகலை வழங்குகிறது.
அந்த செயலியை பயன்படுத்தும் பயனர்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தேவையான பிரிவுகளை தேர்ந்தெடுக்கலாம். புதிய புதுப்பிப்பு வெளியிடப்படும் போதெல்லாம் மக்கள் அறிவிப்பைப் பெறுவார்கள்.
தங்கள் மாவட்டம் இந்த அணுகலை பெற்றுள்ளதா என்பதனை இந்த செயலி மூலம் தெரிந்துக்கொள்ள முடியும். அதற்கான இணையத்தளத்தை பார்வையிடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
கோடையில் உள்ளூர் நீர் கட்டுப்பாடுகளை சரிபார்க்க இது மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக பயன்படுத்திய மக்கள் கூறுகின்றனர்.
தீவிர வானிலை குறித்தும், இயற்கைப் பேரழிவு, தொழில்துறை விபத்து அல்லது பயங்கரவாதம் போன்ற பெரிய சம்பவங்களின் போது, விழிப்பூட்டல்களைப் பெற இந்த செயலி உதவுகின்றது.
இந்த செயலி மூலம் பிரான்ஸில் அதிகரிததுள்ள திருட்டு சம்பவங்கள் தொடர்பில் பொது மக்களுக்கு தெரிவுப்படுத்த முடியும் எனவும் இதனால் திருடர்களிடமிருந்து மக்களை காப்பாற்ற முடியும் என குறிப்பிடபப்டுகின்றது.