மன்னர் சார்ல்ஸுக்குக் கிடைத்த எதிர்பாராத அன்பளிப்பு! (Video)
மக்கள் சந்திபின்போது பிரிட்டனின் வேல்ஸில் (Wales) மன்னர் சார்ல்ஸுக்குக் (King Charles III ) ஓர் அன்பளிப்பு எதிர்பாராதவகையில் காத்திருந்தது.
மன்னர் சார்ல்ஸ் (King Charles III ) பொதுமக்களைச் சந்தித்துக்கொண்டிருந்தார்.அப்போது பொதுமக்களில் ஒருவர் மன்னரிடம் குமிழ்முனைப் பேனாவைக் கொடுத்தார்.
மன்னர் முகத்தில் குழப்பம் ஏற்பட்டததி கண்ட அப்பெண் "ஒரு வேளை தேவைப்பட்டலாம் என கூறினார்.
someone’s given Charles a pen ? #KingCharles pic.twitter.com/dPd9YoBfjL
— Royal Supporter ♔ (@FanCambridges) September 16, 2022
அப்பெண் கூறியதை புரிந்துகொண்டதும் மன்னர் சார்ல்ஸ் (King Charles III )வாய்விட்டுச் சிரித்தார்.
ஏனெனில் ஒருசில நாள்களுக்கு முன்பு வட அயர்லந்தில் கையெழுத்துப் போடும்போது பேனா மை கசிந்ததால் அவர் எரிச்சலடையும் காணொளி சமூக ஊடகத்தில் பரவலாகப் பகிரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.