ஆப்கானிஸ்தானில் வாழும் தங்கள் துணைவர்களின் நலன் குறித்து அஞ்சும் கனேடிய மனைவிகள்: யாரும் உதவவில்லை என புகார்
ஒன்ராறியோவில் செவிலியராக பணியாற்றும் Mohammad Azim (29) என்ற கனேடிய பெண்ணின் கணவர் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருக்கிறார்.
திடீரென ஆப்கானிஸ்தான் தாலிபான்களிடம் வீழ்ந்ததால், அச்சத்தில் தன் கணவர் வீட்டை விட்டு வெளியே கூட வராமல் வீட்டுக்குள்ளேயே பதுங்கி இருப்பதாக தெரிவிக்கிறார் Mohammad Azim.
அவர் தன் கணவரைக் குறித்து பயப்பட காரணம், தன் கணவர் ஒரு வெளிநாட்டுப் பெண்ணை திருமணம் செய்துள்ளார் என்பதை அக்கம்பக்கத்தவர்கள் தாலிபான்களிடம் போட்டுக்கொடுத்துவிட்டால், அவருக்கு ஆபத்து ஏற்படும் என Mohammad Azim அஞ்சுகிறார்.
ஒன்ராறியோவில் வாழும் Shuhra Abdul Baqi (24), தன் கணவர் ஒரு சட்டத்தரணி என்பதால் தாலிபான்களால் அவரது உயிருக்கு ஆபத்து நேரிடும் என அஞ்சுகிறார்.
கால்கரியில் வாழும் Nilab Dostdarஇன் கணவர் ஒரு காப்பீட்டு நிறுவனத்தில் வேலை செய்கிறார். அது ஒரு அமெரிக்கர் நடத்தும் நிறுவனம். தாலிபான்களின் சட்டங்கள் கடுமையானவை என்பதால், இப்படி ஒவ்வொருவரும் தத்தம் துணைகளின் நிலைமை என்ன ஆகுமோ என அச்சத்துடன் இருக்கிறார்கள்.
இதற்கிடையில், தங்கள் பகுதி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் உதவி கோரியும் சரியான உதவி எதுவும் இதுவரை கிடைக்கவில்லை என்கிறார்கள் இந்த பெண்கள்.