றொரன்டோ பொலிஸார் மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை
றொரன்டோ பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். றொரன்டோ பெரும்பாக பகுதிகளில் கட்டுமான பணிகள் இடம்பெற்று வரும் பகுதிகளில் காணப்படும் கிரேன்களில் (crane) மக்கள் ஏறி புகைப்படம் எடுத்து வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறான நடவடிக்கைகள் மிகவும் ஆபத்தானது என பொலிஸார் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
குற்றவியல் சட்ட நடவடிக்கை
இவ்வாறு கட்டுமான பணிகளில் இடம்பெறும் பகுதிகளில் காணப்படும் கிரேன்களில் ஏறுவோருக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என அறவித்துள்ளனர்.
றொரன்டேவரின் யோங் மற்றும் கிரன்வெலி வீதிகளுக்கு அருகாமையில் நிர்மானிக்கப்பட்டு வரும் கட்டிடமொன்றின் வளாகத்தில் காணப்படும் கிரேனில் சிலர் ஏறி புகைப்படம் எடுப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது.
இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவது மிகவும் ஆபத்தானது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் றொரன்டோ பொலிஸார் டுவிட்டர் பதிவொன்றையும் இட்டுள்ளனர்.