தடுப்பூசி தொடர்பில் கனடா அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
கனடா நாட்டில் அடுத்தாண்டு தொடக்கம் முதல் தடுப்பூசி செலுத்தாத தொழில்முறை மற்றும் அமெச்சூர் விளையாட்டு வீரர்களுக்கு அனுமதி அளிக்கப்படமாட்டாது என தகவல் வெளியாகியுள்ளன.
இதனால், தற்போது விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ள NBA, NHL, MLB மற்றும் MLS அணிகளை சேர்ந்த தடுப்பூசி இதுவரை போட்டுக்கொள்ளாத வீரர்களுக்கு சிக்கல் ஏற்படும் என்றே தெரிய வந்துள்ளது. இதற்கான கால அவகாசமாக எதிர்வரும் ஜனவரி 15 ஆம் திகதி வரை வழங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் தங்கள் வீரர்களை பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ளவும் கோரியிருந்தது.
கனேடியரும் Golden State Warriors அணி வீரருமான Andrew Wiggins தெரிவிக்கையில், NBA விளையாட வேண்டும் என்றால், கண்டிப்பாக தடுப்பூசி போட்டிருக்க வேண்டும், அதையே நானும் பின்பற்றியுள்ளேன் என்றார்.
மேலும் NHL அணியில் நல்லவர் மட்டுமே தடுப்பூசி பெற்றுக்கொள்ளாமல் இருப்பதாக அணி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.