அமெரிக்காவின் செயலால் கடுப்பான சீனா; மற்றோர் உயர்நிலைக் குழு தைவானுக்குப் பயணம்
அமெரிக்காவின் மற்றோர் உயர்நிலைக் குழு தைவானுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது. அமெரிக்க மக்களவை நாயகர் நான்சி பெலோசியின் (Nancy Pelosi) பயணம் ஏற்படுத்திய சர்ச்சை அடங்குவதற்குள் அந்தப் புதிய, முன்னறிவிப்பு இல்லாத பயணம் இடம்பெறுகிறது.
அந்தவகையில் செனட்டர் எட் மார்க்கி (Ed Markey) தலைமையில் அமெரிக்கக் குழு தைவானுக்குச் சென்றுள்ளது.
செனட்டர் எட் மார்க்கி (Ed Markey) செனட் சபையின் கிழக்காசியா, பசிபிக் வட்டாரத்திக்கான வெளியுறவுக் குழுத் தலைவர் அவர்.
அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழு, தைவானிய அதிபர் சாய் இங்வென்னைச் (Tsai Ing-wen) சந்திக்கிறது. அதேவேளை புதிய பயணத்துக்குப் பதிலடி தரப் போவதாக சீனாவின் அரசாங்கம் ஊடகம் தெரிவித்துள்ளது.
மேலும் தைவானிய நீரிணையில் நிலைத்தன்மை இருப்பதை அமெரிக்கா விரும்பவில்லை என்பதையே இந்தப் புதிய பயணம் காட்டுவதாக வாஷிங்டனில் இருக்கும் சீனத் தூதரகம் கூறியது.