டொனால்ட் ட்ரம்பை நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கும் மற்றொரு நாடு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை அமைதிக்கான நோபல் பரிசுக்கு கம்போடியா பரிந்துரைக்கும் என அந்த நாட்டின் துணைப் பிரதமர் சன் சாந்தோல் தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஒரு தசாப்தத்திற்கும் மேலான இரு நாடுகளுக்கும் இடையேயான எல்லை பிரச்சினை தொடர்பில் அண்மையில் ஐந்து நாட்கள் நடந்த கடுமையான போரை நிறுத்துவதற்கான டொனால்ட் ட்ரம்பின் நேரடித் தலையீட்டுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
இந்த மோதலில் குறைந்தது 43 பேர் கொல்லப்பட்துடன், 300,000 க்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்தனர்.
இராஜதந்திர முட்டுக்கட்டையை உடைத்த டொனால்ட் ட்ரம்பின் தொலைபேசி அழைப்பைத் தொடர்ந்து இந்த போர் நிறுத்தம் எட்டப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்காக, கடந்த வாரம் திங்கட்கிழமை மலேசியாவில் போர் நிறுத்தம் கையெழுத்தானது.