இடிந்து விழுந்த அடுக்குமாடி கட்டிடம் ; ஐவர் பலி
மத்திய கிழக்கு நாடான லெபனானில் உள்ள திரிபோலி நகரில் ஒரு பழமையான அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. 2 மாடிகளைக் கொண்ட இந்த கட்டிடம் ஒவ்வொன்றும் 6 அடுக்குமாடி குடியிருப்புகளைக் கொண்டிருந்தது.
இந்த கட்டிடம் இடிந்து விழுந்ததில் ஒரு குழந்தை மற்றும் ஒரு வயதான பெண் உட்பட 5 பேர் இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு படையினர் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டனர். மேலும் இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடிய 8 பேரை மீட்டு வைத்தியசாலையில் சேர்த்தனர்.
மீட்பு உபகரணங்கள் பெரிய அளவில் இல்லாததால் மீட்புப் படையினர் அடிப்படை உபகரணங்கள் மற்றும் வெறும் கைகளால் கட்டிட இடிபாடுகளை பொதுமக்கள் உதவியுடன் அகற்றி வருகின்றனர்.
பொதுமக்களிடம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மீட்பு பணிகளுக்கு உதவவும், இடிந்த கட்டிடத்தில் வசிப்பவர்களை, பக்கத்து வீடுகளில் தங்க இடம் வழங்கி உதவுமாறும் அதிபர் ஜோசப் அவுன் கேட்டுக்கொண்டார்.