இந்தியாவால் தேடப்படுவோர் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்திலா?
இந்தியாவின் சென்னை நகரத்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை சென்ற ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் விசேட சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை தெரிவித்துள்ளது.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான UL 122 விமானத்திலேயே இந்த விசேட சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்த விமானம் இன்று காலை 11:59 மணியளவில் இந்தியாவின் சென்னை நகரத்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்திருந்தது.
இந்திய பொலிஸாரால் தேடப்படும் சந்தேக நபர்கள் சிலர் குறித்த விமானத்தில் இருப்பதாக விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து குறித்த விமானத்தில் விசேட சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்த விசேட சோதனை நடவடிக்கையை முன்னிட்டு அமுல்படுத்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக சிங்கப்பூர் நோக்கிப் பயணிக்கவிருந்த UL 308 விமானம் தாமதமாகியுள்ளது.