பிரான்ஸ் வீரரை துரத்தும் ஆர்ஜண்டினா வீரர்!
பிரெஞ்சு வீரர் கைலியன் எம்பாப்பே(Kylian Mbappé) மீது ஆர்ஜண்டினா அணியின் கோல் கீப்பரான எமிலியானோ மார்டின் தொடர்ச்சியாக அவமதிக்கும் வகையில் தாக்குதல் நடத்தி வருகிறார் என தெரிவிக்கப்படுகின்றது.
உலக்கிண்ண போட்டியில் ஆர்ஜண்டினா வெற்றி பெற்ற போது, சிறந்து கோல் கீப்பர் விருது (Gant en or) அதே அணியைச் சேர்ந்த எமிலியானோவுக்கு கிடைத்தது.
அப்போது அவர் தனது விருதை இடுப்புக்கு கீழே வைத்து, கைலியன் எம்பாப்பே (Kylian Mbappé) நோக்கி காண்பித்து ஆபாசமான சைகையில் நடந்துகொண்டார்.
அவரது இச்செயல் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது. அந்த சர்ச்சைகள் அடங்கும் முன்னர், தற்போது மீண்டும் கைலியன் எம்பாப்பே (Kylian Mbappé)மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.
ஆர்ஜண்டினாவில் இடம்பெற்ற வெற்றிக்கொண்டாட்டத்தின் போது எமிலியானோ மார்டின் கைகளில் கைலியன் எம்பாப்பே(Kylian Mbappé)இன் உருவ பொம்மையை வைத்துக்கொண்டு வெற்றிக்கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.
அருகில் மெஸ்ஸியும் இருந்துள்ளார். அவரது இந்த செயல் சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சைகளையும், எதிர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
எமிலியானோ மார்டின் கோல் கீப்பராக நிற்கும் போது அவரை தாண்டி மூன்று கோல்களையும், பெனாடி கோல் ஒன்றையும் கைலியன் எம்பாப்பே(Kylian Mbappé) தனி ஒரு ஆளாக விளாசி தள்ளியிருந்தார்.
இருந்தபோதும் ஆர்ஜண்டினா அணியே வெற்றி பெற்றது. அதையடுத்தே எமிலியானோ தொடர்ச்சியாக இதுபோன்ற செயல்களின் ஈடுபட்டு வருகின்றார்.