25 ஆண்டுகளுக்கு முன்னரான பாலியல் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய நபர் கைது
கனடாவின் ஹால்டன் ஹில்ஸ் பகுதியில், 25 ஆண்டுகளுக்கு முன்னர் பல்வேறு பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்பான விசாரணையில் ஒரு ஆணை காவல்துறை கைது செய்துள்ளது.
கடந்த மாதம் இந்த பாலியல் வன்கொடுமை சம்பவங்கள்” குறித்து விசாரணை தொடங்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவங்கள் 2000ஆம் ஆண்டு முதல் ஹால்டன் ஹில்ஸில் நடந்ததாகவும், இந்த சம்பவங்களில் ஒரு ஆணும் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
58 வயதுடைய ஹால்டன் ஹில்ஸைச் சேர்ந்த ஜீசஸ் எரிக் லூனா வால்டோவினோஸ் என்ற சந்தேக நபர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் மீது இரண்டு பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட நான்கு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
காவல்துறையினர், இன்னும் வெளிவராத மேலும் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கலாம் என்று அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர் சுயதொழில் செய்பவர் மற்றும் தனது ஜன்னல் துப்புரவு தொழிலை நடத்தி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நபர் தொடர்பில் தகவல் உள்ளவர்கள் ஹால்டன் பிராந்திய காவல்துறை சேவையை அல்லது க்ரைம் ஸ்டாப்பர்ஸை அநாமதேயமாக தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.