விபத்தில் சிக்கிய முன்னாள் சபாநாயகர் : சிகிச்சைக்காக வைத்தியசாலையில்....
தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் சபாநாயகருமான அசோக ரன்வல சபுகஸ்கந்த பகுதியில் இடம்பெற்ற விபத்து ஒன்றின் பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபுகஸ்கந்தவில் உள்ள தெனியமுல்ல பகுதியில், நாடாளுமன்ற உறுப்பினரின் வாகனம் மற்றுமொரு கார் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
சிகிச்சைக்காக மருத்துவமனையில்
சம்பவத்தின் போது முன்னாள் சபாநாயகரே தனது வாகனத்தை ஓட்டிச் சென்றதாகவும், சிகிச்சைக்காக ராகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினரின் வாகனத்தால் மோதுண்ட காரில் பயணித்த ஒரு பெண்ணும் ஒரு பிள்ளையும் லேசான காயங்களுக்கு ஆளாகி மருத்துவ சிகிச்சை பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.