இஸ்ரேலில் பாடசாலை மாணவி பாலியல் வன்கொடுமை; இலங்கையர் கைது
இஸ்ரேலில் சிறப்புத் தேவைகள் கொண்ட பாடசாலை மாணவி ஒருவரைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
2025 மே மாதம் தொழிலுக்காக இஸ்ரேல் சென்ற குறித்த இலங்கையர், குறித்த குற்றச்சாட்டு தொடர்பில், காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இஸ்ரேலிய அதிகாரிகள் மற்றும் இன்டர்போல் இணைந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றன. குறித்த நபர் தனது அதிகாரப்பூர்வ தொழிலை தவிர்த்து வெளிப்பணிகளில் ஈடுபட்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.
இந்த சம்பவத்தை அடுத்து, இஸ்ரேலில் வாழும் இலங்கை மக்கள் அந்த நாட்டின் சட்டங்களையும் சமூக நெறிமுறைகளையும் மிகக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என இலங்கைத் தூதரகம் வலியுறுத்தியுள்ளது.