ஆஸ்ட்ராஜெனகா நிறுவனம் ஐரோப்பிய கூட்டமைப்பு புகார்

Praveen
Report this article
பிரித்தானியாவைச் சேர்ந்த ஆஸ்ட்ராஜெனகா நிறுவனம் தாங்கள் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியை ஐரோப்பிய கூட்டமைப்பைச் சேர்ந்த 27 நாடுகளுக்கு வினியோகம் செய்வது தொடர்பாக ஐரோப்பிய ஆணையத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் படி இந்த ஆண்டு இறுதிக்குள் 27 நாடுகளுக்கும் மொத்தமாக 40 கோடி தடுப்பூசிகளை வழங்க நிறுவனம் ஒப்புக்கொண்டது. ஆனால் ஆஸ்ட்ராஜெனகா நிறுவனம் ஒப்பந்தத்தின்படி தடுப்பூசி வினியோகத்தை மேற்கொள்ளவில்லை என ஐரோப்பிய கூட்டமைப்பு குற்றம் சாட்டுகிறது.
முதல் காலாண்டில் 10 கோடி தடுப்பூசிகள் வழங்குவதாக உறுதி அளிக்கப்பட்ட நிலையில் வெறும் 3 கோடி தடுப்பூசிகள் மட்டுமே வழங்கப்பட்டதாகவும், 2-ம் காலாண்டில் 18 கோடி தடுப்பூசிகளுக்கு பதிலாக 7 கோடி தடுப்பூசிகள் மட்டுமே வழங்கப்பட்டதாகவும் ஐரோப்பிய கூட்டமைப்பு கூறுகிறது.
இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ஐரோப்பிய கூட்டமைப்பு ஆஸ்ட்ராஜெனகா நிறுவனத்தை கோர்ட்டுக்கு கொண்டு சென்றது. பெல்ஜியம் தலைநகர் பிரசல்சில் உள்ள கோர்ட்டில் ஆஸ்ட்ராஜெனகா நிறுவனம் மீது ஐரோப்பிய கூட்டமைப்பு தொடர்ந்த வழக்கு விசாரணை நேற்று நடந்தது.
அப்போது ஐரோப்பிய கூட்டமைப்பின் சார்பில் ஆஜரான வக்கீல் ஒப்பந்தத்தில் உள்ளபடி 27 ஐரோப்பிய நாடுகளுக்கு உடனடியாக தடுப்பூசிகளை வினியோகம் செய்ய ஆஸ்ட்ராஜெனகா நிறுவனத்துக்கு உத்தரவிடும்படி கேட்டுக்கொண்டார். இருதரப்பு வாதங்களைக் கேட்டு அறிந்த நீதிபதி வழக்கு விசாரணையை 28-ந்தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.