ஒன்றாரியோ முதல்வர் பிரதமரை சந்திக்க ஒட்டாவா விஜயம்
ஒன்டாரியோ முதல்வர் டக் ஃபோர்ட், பிரதமர் மார்க் கார்னியை சந்திக்க ஒட்டாவாவிற்கு விஜயம் செய்ய உள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் கட்டண உயர்வுகளால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை வலுப்படுத்த வரி குறைப்பு தேவை என கோரிக்கை விடுக்கும் வகையில் அவர் இவ்வாறு விஜயம் செய்ய உள்ளார்.
எதிர்வரும் வாரம் பிரதமர் மார்க் கார்னியுடன் ஒரு தனிப்பட்ட சந்திப்புக்கு ஒட்டாவாவுக்கு பயணம் செய்யவுள்ளார்.
பிரதமரை நேருக்கு நேர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
நாம் பொருளாதார வளர்ச்சிக்கு உகந்த சூழலை உருவாக்க வேண்டும் எனவும், நாம் செய்யக்கூடிய சில விடயங்கள் உண்மையில் மாற்றத்தை ஏற்படுத்தும் எனவும் போர்ட் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நடவடிக்கைகள் குறித்து போர்ட் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
ஆனால், ஒன்டாரியோ முதல்வர், தற்போதைய வர்த்தகப் போரை எதிர்கொள்ள நாட்டை சிறப்பாக நிலைநிறுத்தக்கூடிய மாற்றங்களுக்கு கார்னியை வலியுறுத்துவதே ஒட்டாவாவில் தனது கவனமாக இருக்கும் என மேலும் குறிப்பிட்டுள்ளார்.