ஊக்க மருந்துகளை பயன்படுத்திய வீரர்கள் ஒலிம்பிக் போட்டியில் விளையாடத் தடை
33ஆவது ஒலிம்பிக் போட்டித் தொடர் பிரான்ஸில் ஆரம்பிக்கப்பட்டு, பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகள் நடைபெற்று வருகின்ற நிலையில், இரு வகையான ஊக்கமருந்துகளைப் பயன்படுத்திய குற்ற சாட்டில் ஈராக்கைச் சோ்ந்த ஜூடோ வீரா் சஜத் செஹென் ஒலிம்பிக் போட்டியில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதில் 196 நாடுகளைச் சேர்ந்த மொத்தம் 10,672 வீர, வீராங்கனைகள் 32 விளையாட்டுகளில் பங்கேற்கின்றனர்.
இந்நிலையில் ஒலிம்பிக் போட்டியில் வீர, வீராங்கனைகளிடையே ஊக்கமருந்து பயன்பாடு தொடா்பான பரிசோதனையைச் சா்வதேச சோதனை அமைப்பு (ஐ.டி.ஏ) மேற்கொண்டு வருகிறது.
கடந்த செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட சோதனையில், ஈராக்கைச் சோ்ந்த ஜூடோ வீரா் சஜத் செஹென் (28) இரு வகையான ஊக்கமருந்துகளைப் பயன்படுத்தியதாகக் கண்டறியப்பட்டதையடுத்து, அவருக்கு ஒலிம்பிக் போட்டியில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் , தென் கொரிய வீரர்களை, வடகொரிய வீரர்கள் என மாறி அறிமுகப்படுத்தியதற்காக ஒலிம்பிக் ஏற்பாட்டாளர்கள் அதற்காக மன்னிப்புக் கேட்டுள்ளனர்.