பிரான்ஸில் இனவாதப் பயங்கரவாதத் தாக்குதல் ; கடும் கண்டனம் தெரிவித்த மக்ரோன்

Emmanuel Macron France
By Sahana Oct 24, 2026 01:26 AM GMT
Report

பிரான்ஸின் யுவெலின் (Yvelines) மாவட்டத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை இனவாதப் பயங்கரவாதத் தாக்குதல் எனக் குறிப்பிட்டுள்ள அந்நாட்டு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன், இனவாதத்துக்கும் பாகுபாட்டுக்கும் எதிராக பிரான்ஸ் ஒருபோதும் விட்டுக்கொடுக்காது எனத் தெரிவித்துள்ளார்.

ட்ராப்ஸ் (Trappes) மற்றும் லா வெரியர் (La Verrière) நகரங்களில் இடம்பெற்ற இத்தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஐவர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் 12 வயதுச் சிறுமி ஒருவரும் அடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மக்ரோன், அங்குள்ள உள்ளூர் பிரதிநிதிகள் மற்றும் மக்களைச் சந்தித்த பின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில், இந்தச் சம்பவம் பிரான்ஸ் குடியரசின் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

பிரான்ஸில் இனவாதப் பயங்கரவாதத் தாக்குதல் ; கடும் கண்டனம் தெரிவித்த மக்ரோன் | Attack France Macron Expresses Strong Condemnation

இனவாதச் சித்தாந்தத்தின் அடிப்படையில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் அவர்களின் தோலின் நிறம் அல்லது அவர்கள் பின்பற்றுவதாகக் கருதப்பட்ட மதத்தின் காரணமாக இலக்கு வைக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

“இன்று நடந்தது ஒரு திருப்புமுனை. தோலின் நிறம் அல்லது அவர்கள் பின்பற்றுவதாகக் கருதப்படும் மதத்தின் காரணமாக எமது நாட்டு மக்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர்.

இதனை நாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது” என அவர் வலியுறுத்தினார். தாக்குதல்தாரியை விரைவாகக் கைது செய்து, மேலும் உயிரிழப்புகள் ஏற்படுவதைத் தடுத்த பாதுகாப்புப் படையினர் மற்றும் காவல்துறையினருக்கு மக்ரோன் தனது நன்றியைத் தெரிவித்தார்.

அத்துடன், விசாரணைகளை உடனடியாக முன்னெடுத்த தேசிய பயங்கரவாதத் தடுப்பு வழக்குத் தொடுநர் அலுவலகம் மற்றும் நீதித்துறை அதிகாரிகளின் நடவடிக்கைகளையும் அவர் பாராட்டினார்.

தாக்குதலில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கும் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்த அவர், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசாங்கமும் தேசமும் முழுமையான ஆதரவை வழங்கும் என்றும் உறுதியளித்தார்.

குறிப்பாக, மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வந்த 12 வயதுச் சிறுமி உள்ளிட்ட காயமடைந்தவர்களின் நிலை குறித்து கவலை வெளியிட்ட அவர், அவர்களது குடும்பங்களுக்கு ஆதரவு வழங்க வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார். 

பிரான்ஸ் குடியரசில் இனவாதம் மற்றும் மத அடிப்படையிலான பாகுபாட்டுக்கு இடமில்லை எனத் தெரிவித்த மக்ரோன், இத்தகைய வன்முறைகளுக்கு வழிவகுக்கும் கருத்துகள் மற்றும் சித்தாந்தங்களுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

“குடியரசில் இதற்கு இடமில்லை. பிரான்ஸில் இதற்கு இடமில்லை. என்ன நடந்தது என்பதைப் புரிந்துகொள்வதற்கும், இத்தகைய செயல்களை நியாயப்படுத்தும் கருத்துகளுக்கு எதிராகப் போராடுவதற்கும் நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்” என அவர் தெரிவித்தார்.

பிரான்ஸில் இனவாதப் பயங்கரவாதத் தாக்குதல் ; கடும் கண்டனம் தெரிவித்த மக்ரோன் | Attack France Macron Expresses Strong Condemnation

பிரான்ஸ் குடியரசு அனைத்து மக்களையும் சமமாக நடத்துவதாகவும், தோலின் நிறம், மதம் அல்லது அரசியல் கருத்துகளின் அடிப்படையில் மக்களைப் பாகுபடுத்துவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். 

தாக்குதலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் மக்களுக்கும் பிரான்ஸ் மக்களுக்கும் ஆறுதல் தெரிவித்த ஜனாதிபதி, அச்சத்துக்கு அடிபணிய வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார்.

“தலைகுனிய வேண்டாம். நீங்கள் பிரெஞ்சு மக்கள். எமது இளைய தலைமுறையே எமது பலம். பயப்பட வேண்டாம்; குடியரசு நிலைத்து நிற்கும்” என அவர் தெரிவித்தார்.

மேலும், ஆசிரியர்கள், சமூக அமைப்புகள், உள்ளூர் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பிரான்ஸின் ஒற்றுமையைப் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிப்பதாகக் குறிப்பிட்ட அவர், மக்களைப் பிரிக்கும் எந்தவொரு முயற்சிக்கும் இடமளிக்கக் கூடாது என்றும் வலியுறுத்தினார்.

இதேவேளை, இத்தாக்குதல் தொடர்பான விசாரணைகளை பிரான்ஸின் தேசிய பயங்கரவாதத் தடுப்பு வழக்குத் தொடுநர் அலுவலகம் பொறுப்பேற்றுள்ளதுடன், சம்பவத்தின் பின்னணி மற்றும் தாக்குதலுக்கான நோக்கம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன 

இனவாத வன்முறைக்கு எதிராக பிரான்ஸ் மக்கள் ஒன்றிணைந்து நிற்க வேண்டும் என வலியுறுத்திய மக்ரோன், நாட்டின் அடிப்படை விழுமியங்களையும் ஒற்றுமையையும் பாதுகாப்பதில் அரசாங்கம் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு

20 Oct, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, நுணாவில் மேற்கு, Toronto, Canada

22 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வரக்காப்பொல, Scarborough, Canada

23 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Feltham, United Kingdom, யாழ்ப்பாணம்

23 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவிஸ், Switzerland

23 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மாமூலை

22 Oct, 2012
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US