இரண்டு கனேடியப் பிரஜைகள் மீது இலங்கையில் தாக்குதல்!!
இலங்கையில் புலம்பெயரந்து 33 வருடங்களின் பின் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இரண்டு கனேடியப் பிரஜைகள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் 150வது வருட பூர்தியை முன்னிட்ட நிகழ்வுகளுக்காக கனடாவில் இருந்து வருகைதந்திருந்தவர்கள் மீதே மட்டக்கப்பில் வைத்து தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி ஸ்தாபிக்கப்பட்டு 150 வருடத்தை நிறைவுசெய்யும் முகமாக பல நிகழ்ச்சிகள் மட்டக்களப்பில் நடைபெற்றுவருகின்றன.
அந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக ஏராளமான பழைய மாணவர்கள் அவுஸ்திரேலியா, பிரித்தானியா, கனடா, அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளில் இருந்தும் மட்டக்களப்புக்கு வருகைதந்துள்ளார்கள்.
கனடா நாட்டில் இருந்து வந்தவர்கள் மீதே தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.