கப்பல்கள் மீது தாக்குதல் ; எண்ணெய் முனையங்களின் செயற்பாடுகளை நிறுத்திய ஈராக்
ஈராக்கின் எண்ணெய் முனையங்களின் செயற்பாடுகள் அனைத்தும் முழுமையாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஈராக் துறைமுகங்களுக்கான பொது நிறுவனத்தின் தலைவர் ஃபர்ஹான் அல்-ஃபர்தூசி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஈராக் செய்தி நிறுவனம் ஒன்றை மேற்கோள் காட்டி அல்ஜெஸீரா செய்தியை வெளியிட்டுள்ளது.

பஸ்ரா மாகாணத்திலுள்ள உம் காசர் (Umm Qasr) துறைமுகத்தில் மசகு எண்ணெய் ஏற்றப்பட்ட இரண்டு கப்பல்கள் மீது வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட படகுகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதல்களைத் தொடர்ந்து பாதுகாப்பு கருதி எண்ணெய் முனையங்களின் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளன. அதேவேளை இராக்கின் எண்ணெய் முனையங்கள் மூடப்பட்ட போதிலும், ஏனைய வர்த்தகத் துறைமுகங்களின் செயற்பாடுகள் வழமை போன்று இடம்பெற்று வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.