ட்விட்டரால் திண்டாடும் எலன் மஸ்க் ஏலத்திற்கு வந்த பொருட்கள்!
ட்விட்டர் நிறுவனத்தின் பொருட்கள் ஏலத்தில் விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் ட்விட்டர் தலைமையகம் உள்ளது. அது 100க்கும் மேற்பட்ட பொருட்களை இணையம்வழி ஏலத்திற்கு விடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ட்விட்டரின் மிகப் பிரபலமான பறவைச் சின்னம் போல் செதுக்கப்பட்ட சிற்பம் 11, 000 டொலருக்கு ஏலத்திற்கு விடப்பட்டுள்ளது. ட்விட்டர் நிறுவனத்தை எலோன் மஸ்க்(Elon Musk) சென்ற ஒக்டோபர் மாதம் வாங்கினார்.
அவர் செலவுகளைக் குறைக்கும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். வேலை செய்யும் ஆட்களைக் குறைக்கிறார். அலுவலகத்தில் இருக்கும் பொருள்களை விற்கிறார்.
ஊழியர்களுக்கு இலவச உணவு கொடுப்பது போன்ற டுவிட்டரின் பல சலுகைகளையும் அவர் நிறுத்திவிட்டார். ட்விட்டர் நிறுவனம் நொடிப்புநிலையைச் சந்திக்கக்கூடும் என்று எலோன் மஸ்க்(Elon Musk) எச்சரிக்கிறார்.
சின்னஞ்சிறு பொருட்களை கூட விற்பனைக்கு வந்துவிட்டன. ட்விட்டர் நிறுவனம் உலகெங்கும் உள்ள பல அலுவலங்களுக்கு வாடகையைக் கட்ட தவறியுள்ளது. சான் பிரான்சிஸ்கோவில் இருக்கும் ட்விட்டர் தலைமையகத்துக்கே வாடகை கட்டவில்லை என்கிறார்கள்.
கட்டடத்தின் உரிமையாளர் ட்விட்டர் மீது வழக்குத் தொடுத்திருக்கிறார்.
எலோன் மஸ்க்(Elon Musk) டிவிட்டரை வாங்கிய பிறகு பல விளம்பரதாரர்கள் விலகிக் கொண்டார்கள். அதனால் வருமானம் சரிந்துவிட்டது.