முதலைக்குள்ளிருந்து மீட்கப்பட்ட மீனவரின் உடல்!
அவுஸ்திரேலியாவில் காணாமல் போயிருந்த மீனவர் ஒருவரின் உடல் ஒரு முதலைக்குள்ளிருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.
65 வயதான கெவின் டார்மோடி எனும் மீனவர் இறுதியாக குயின்ஸ்லாந்து மாநிலத்தின் வட பகுதியிலுள்ள கென்னடிஸ் பென்ட் எனும் இடத்தில் கடந்த சனிக்கிழமை காணப்பட்டார்.
முதலைக்குள் மனித உடல்
குறித்த பிரதேசம உவர்நீர் முதலைகள் நிறைந்த பகுதி என கூறப்படுகின்றது இந்நிலையில் இரு நாட்கள் தேடியும் அவர் கண்டுபிடிக்கப்படாத நிலையில், திங்கட்கிழமை (01) பொலிஸார் இரு பாரிய முதலைகளைக் கொன்று சோதனையிட்டபோது அவற்றில் ஒரு முதலைக்குள் மனித உடல் கண்டுபிடிக்கப்பட்டது. எனினும் அந்த உடல் முறையாக அடையாளம் காணப்படவில்லை.
இந்நிலையில் , மீனவர் கெவின் டார்மோடியை தேடும் நடவடிக்கை சோகத்தில் முடிவடைந்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
அதேவேளை கொல்லப்பட்ட இரு முதலைகளும் தலா 4.1 மீற்றர் (13.4அடி) நீளமானவை. கெவின் இறுதியாக காணப்பட்ட இடத்திலிருந்து 1.5 கிலோமீற்றர் தூரத்தில் வைத்து அம்முதலைகள் சுட்டுக்கொல்லப்பட்டன.
மேலும் ஒரு முதலையின் உடலிலிருந்தே மனித உடல்பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்ட போதிலும், இரு முதலைகளும் இச்சம்பவத்தில் தொடர்புபட்டிருக்கலாம் என பொலிஸார் கருதுகின்றனர்.