அவுஸ்திரேலியாவில் துப்பாக்கிச்சூடு ; பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு
ஆஸ்திரேலியாவின் நியுசவுத் வேல்ஸ் மாகாணத்தின் சிட்னி நகரில் போண்டி என்ற இடத்தில் உள்ள கடற்கரை மிகவும் பிரபலமானதாகும். விடுமுறை நாட்களில் இந்த கடற்கரையில் மக்கள் கூட்டம் அலைமோதும்.
ஞாயிற்றுக்கிழமையான நேற்று மக்கள் கடற்கரையில் பொழுதைக் கழித்துக்கொண்டிருந்த நிலையில், அங்கு வந்த 2 மர்ம நபர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது என நியூ சவுத் வேல்ஸ் அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.

பல்வேறு தலைவர்களும் கண்டனம்
இந்த துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் பலியாகினர் என முதல் கட்ட தகவல் வெளியானது.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் யார் என்பது குறித்து அந்நாட்டு பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். போண்டி கடற்கரை துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது என நியூ சவுத் வேல்ஸ் அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.