11 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய அரிய வகை உயிரின படிமம் கண்டுபிடிப்பு....கில்லாடி வேட்டையனிடம் சிக்கியது
அவுஸ்திரேலியாவில் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த வேட்டையாடும் திறன் பெற்ற உடல் அமைப்போடு இருந்த பறக்கும் உயிரினத்தின் கீழ் தாடையின் அரிய வகை புதைபடிவ துண்டுகளை அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இது பறக்கும் டிராகன் போன்று உள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர். அழிந்து போன இந்த உயிரினத்திற்கு, 'தபுங்காகா ஷாவி' என பெயரிடப்பட்டு உள்ளது.
11 கோடி ஆண்டுகளுக்கு முன்பு அவுஸ்திரேலியாவில் வாழ்ந்த இந்த பறக்கும் ''டிராகன்', இக்கண்டத்தில் மிகப்பெரிய அளவில் வானத்தில் ஆதிக்கம் செலுத்தி இருக்கலாம் எனவும், 23 அடி நீளம் கொண்ட இந்த உயிரினம், 3 அடி நீள தலையுடன், 40 கூரிய பற்களுடன் மிக பயங்கரமாக வேட்டையாடும் திறனை பெற்று இருந்திருக்கும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.