19 நாடுகளுடன் போர் பயிற்சியில் ஈடுபடும் அவுஸ்திரேலியா!
அவுஸ்திரேலியாவில் நடக்கும் பிரமாண்ட போர் பயிற்சியில், இந்தியா, அமெரிக்கா உட்பட 19 நாடுகளைச் சேர்ந்த 35,000 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா இணைந்து, ‘தாலிஸ்மான் சாப்ரே’ என்ற பெயரில் போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த ஆண்டு குயின்ஸ்லாந்து மாகாணத்தில் 4,500 சதுர கி.மீ.இ பரப்புள்ள பகுதியில் போர் பயிற்சி நடந்து வருகிறது.
இந்நிலையில் இதுவரை இல்லாத அளவுக்கு, இந்தாண்டு, இந்தியா, ஜப்பான், ஜேர்மனி, பிரான்ஸ், இந்தோனேஷியா உட்பட, 19 நாடுகளைச் சேர்ந்த 35,000 வீரர்கள், இந்த போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் அமெரிக்காவிடம் இருந்து வாங்கியுள்ள ‘ஹிமார்ஸ்’ எனப்படும் நீண்ட துாரத்துக்கு ஏவுகணைகளை ஏவும் வாகனத்தை அவுஸ்திரேலியா முதல் முறையாகப் பயன்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.