இஸ்ரேலின் கொடூர தாக்குதலில் அவுஸ்திரேலிய சகோதரர்கள் பலி!
இஸ்ரேல் மேற்கொண்ட விமானதாக்குதலில் இரண்டுஅவுஸ்திரேலிய சகோதரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
தென்லெபனானில் பின்ட் பெய்ல் நகரில் நேற்றிரவு இடம்பெற்ற விமானதாக்குதலில் இப்ராஹிம் மற்றும் அலி பாஜி சகோதரர்கள் உயிரிழந்துள்ளனர்.
மனைவியை சந்திக்க சென்ற கணவர்
சமீபத்தில் அவுஸ்திரேலியா விசாவை பெற்றுக்கொண்ட தனது மனைவியை பார்ப்பதற்காக இப்ராஹிம் லெபனான் சென்றுள்ளார்.
இருவரும் அவுஸ்திரேலியாவில் புதியவாழ்க்கையை ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டு வந்தவேளையில் இது துயரம் இடம்பெற்றுள்ளது.
இஸ்ரேலிய விமானம் ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டது என லெபனான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சிட்னியை சேர்ந்த 30 வயது அலி பாஜி திருமணம் செய்வதற்காக சில வருடங்களிற்கு முன்னர் லெபனான் சென்றிருந்தார்.
இந்நிலையில் எனது குடும்பம் அதிர்ச்சியில் சிக்குண்டுள்ளது உணர்விழந்துள்ளது நம்ப முடியாத நிலையில் உள்ளது என இந்த இறப்புகள் குறித்து உறவினர் ஒருவர்தெரிவித்துள்ளார்.