டொராண்டோ மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
டொராண்டோ மற்றும் தெற்கு ஒன்ராறியோவில் காற்றின் தர அறிக்கை தொடர்பில் எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
காட்டுத்தீ புகை காரணமாக இந்த விசேட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புகை காரணமாக காற்றின் தரம் மோசமடைவதற்கு அல்லது மோசமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் வீதிகள் தென்படுவது குறைவாக இருக்கும் என்று கனடிய சுற்றாடல் திணைக்களம் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
காட்டுத்தீ புகையால் காற்றின் தரமும் புலப்படுத்தலும் குறுகிய தூரங்களில் மாறுபடலாம் மற்றும் நேரத்திற்கு நேரம் இது கணிசமாக மாறுபடலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை வடக்கு முதல் தெற்கு வரை காற்றின் தரம் மேம்படும் என்று கனடிய சுற்றாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சிறப்பு காற்று தர அறிக்கை நீக்கப்படும் வரை வெளியில் செலவிடும் நேரத்தைக் கட்டுப்படுத்துமாறு தேசிய வானிலை அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.
இதேவேளை,, சனிக்கிழமை முதல் நடைமுறையில் இருந்த வெப்ப எச்சரிக்கை நீக்கப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை மிகவும் குளிர்ச்சியாக இருக்கும், முக்கியமாக மேகமூட்டமாக இருக்கும், உயர்ந்த வெப்பநிலை 23 பாகை செல்சியஸ் மற்றும் 30 சதவீத மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.