ஆஸ்திரேலிய இளம் கிரிக்கெட் வீரர் பென் ஆஸ்டின் பத்து தாக்கியதால் மரணம்
ஆஸ்திரேலிய அணியின் நம்பிக்கைக்குரிய இளம் கிரிக்கெட் வீரர் பென் ஆஸ்டின் பந்து தாக்கி உயிரிழந்துள்ளார். அவரது உள்ளூர் கிளப் வியாழக்கிழமை அவர்கள் "முற்றிலும் பேரழிவிற்கு ஆளானதாக" தெரிவித்துள்ளது.
செவ்வாய்கிழமை மெல்போர்னில் நடந்த ஒரு இருபதுக்கு 20 போட்டிக்கு முன்பு ஹெல்மெட் அணிந்திருந்த 17 வயதான பென் ஆஸ்டின், வலைகளில் தானியங்கி பந்துவீச்சு இயந்திரத்தை எதிர்கொண்டதாகக் கூறப்படுகிறது,

அப்போது அவர் தலை மற்றும் கழுத்துப் பகுதியில் அடிபட்டார். ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பென் ஆஸ்டின் புதன்கிழமை உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் "பென்னின் மறைவால் நாங்கள் மிகவும் வருத்தமடைந்துள்ளோம், மேலும் அவரது மரணத்தின் தாக்கங்கள் எங்கள் கிரிக்கெட் சமூகத்தில் உள்ள அனைவராலும் உணரப்படும்" என்று ஃபெர்ன்ட்ரீ கல்லி கிரிக்கெட் கிளப் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதேவேளை ஆஸ்டின் ஒரு வளர்ந்து வரும் பந்து வீச்சாளர் மற்றும் பேட்ஸ்மேன் ஆவார்,