ரூ.11.25 லட்சத்திற்கு விலை போன ஆடு! ஆஸ்திரேலியாவில் சுவாரசியமான சம்பவம்
ஆஸ்திரேலியாவின் ஆடு ஒன்று ரூ.11.25 லட்சத்திற்கு விலை போன சுவாரசியமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தை சேர்ந்த ஆண்ட்ரூ மோஸ்லி எனும் நபர் காட்டு ஆடுகளை மேய்த்து விற்று வருவதை தொழிலாக கொண்டவர்.
இவர் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் கோபார் நகரத்தில் மரக்கேஷ் என பெயரிடப்பட்டுள்ள ஆட்டுக்கிடாவை 11.25 லட்ச ரூபாய்க்கு (21,000 ஆஸ்திரேலிய டாலர்) வாங்கியுள்ளார்.
இதுகுறித்து இவர் கூறுவதாவது, “இந்த முரட்டு ஆட்டுக்கிடா இனப்பெருக்கம் செய்யும் திறன் அதிகம் கொண்டதாக பார்க்கப்படுகிறது. எனவே, தான் இதை அவர் வாங்கியுள்ளதாகவும் மேலும் ஆட்டிறைச்சிக்காக அதிக அளவில் காட்டு ஆடுகள் கொல்லப்படுவது இதற்கான காரணமாக இருக்கிறது. அதனால் தான் இவ்வளவு அதிக விலைக்கு இந்த ஆடு விற்பனை ஆகியுள்ளது” என கூறியுள்ளார்.
முன்னதாக 12 ஆயிரம் ஆஸ்திரேலிய டாலர் மதிப்புக்கு ஒரு ஆடு விலை போனதே சாதனையாக இருந்ததாகவும் இப்போது அந்த சாதனை முறியடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.