கனடாவில் வீட்டு வாடகைகள் தொடர்ந்தும் வீழ்ச்சி
கனடாவில் வீட்டு வாடகைகள் தொடர்ந்தும் குறைவு ஒரு புதிய அறிக்கையில் தெரிவிக்கப்படுவதாவது, கடந்த மார்ச் மாதத்தில் கனடாவின் தேசிய சராசரி வீடுகள் வாடகை 2,119 டொலர்களாக காணப்பட்டது.
இது கடந்த ஆறு மாதங்களாக தொடர்ந்த வருடாந்த குறைவை தொடர்ந்து பதிவு செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Rentals.ca மற்றும் Urbanation நிறுவனங்கள் வெளியிட்டுள்ள மாதாந்த தரவுகளில், மார்ச் 2024-ஐ ஒப்பிடுகையில் இந்த வருடம் மார்ச் மாதத்தில் வீடுகள் வாடகை 2.8% குறைந்துள்ளது.
எனினும், பெப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் மார்ச் மாதத்தில் வாடகை விலை 1.5% உயர்ந்துள்ளது.
இது கடந்த செப்டம்பர் மாதத்துக்கு பிறகு முதல் முறையாக மதாந்த அடிப்படையில் ஏற்படும் உயர்வாகும்.
முந்தைய மாதங்களை விட, மார்ச்சில் வாடகைக்கு வீடுகளை பெற்றுக்கொள்வோரின் செயல்பாடு அதிகரித்துள்ளது. இது வாடகை மலிவாக உள்ளதற்கும் காரணமாக இருக்கலாம்.
ஆனால், அமெரிக்காவுடன் உள்ள வர்த்தக மோதலால் ஏற்படும் எதிர்மறையான பொருளாதார பாதிப்பும் வேலை இழப்புகளும், வரும் நாட்களில் வாடகை விலைகளுக்கு மேலும் அழுத்தம் ஏற்படுத்தக்கூடும்,” என அவர் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
கோவிட்19 தொடங்கிய 2020 மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில், சராசரி வாடகை இப்போது 17.8% அதிகமாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.