ரஷ்ய நீதிமன்றத்தில் தலிபான்கள் மீதான தடை நீக்கம்
ரஷ்ய நீதிமன்றத்தில் தலிபான்கள் மீதான தடையை நீக்க வேண்டும் என அரசு தரப்பு நீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுத்த நிலையில், நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
ரஷ்யா கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தீவிரவாத குழு பட்டியலில் தலிபான் அமைப்பை வகைப்படுத்தியிருந்தது. தற்போது அந்த பட்டியலில் இருந்து தலிபானை நீக்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தலிபான் அமைப்பை தீவிரவாத குழு பட்டியலில் ரஷ்யா வகைப்படுத்தியிருந்ததால், கடந்த 2003ஆம் ஆண்டில் இருந்து தலிபான் உடன் தொடர்பு வைத்திருந்தால் அது ரஷ்ய சட்டத்தின்படி குற்றமாகும்.
தற்போது அத்தடை நீக்கப்பட்டுள்ளதால் ஆப்கானிஸ்தானை ஆளும் தலிபானுக்கு இது இராஜாங்க ரீதியிலான வெற்றியாக பார்க்கப்படுகிறது.
தீவிரவாத அமைப்பு என வகைப்படுத்தப்பட்டதை நீதிமன்றத்தால் இரத்து செய்யப்படும் என கடந்த வருடம் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது.
அதனடிப்படையில் தடையை நீக்க வேண்டும் என அரசு தரப்பு நீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுத்த நிலையில், நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.